தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் அச்சுறுத்தல்களுக்கு எல்லைகள் இல்லை சர்வதேச மாநாட்டில் மத்திய இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி உரை

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 7:05PM by PIB Chennai

சைபர் அச்சுறுத்தல்களுக்கு எல்லைகள் கிடையாது. எனவே சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும் எல்லைகளைக் கடந்து வலுவாக அமைய வேண்டும் என்று தொலைதொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மத்திய இணையமைச்சர் திரு. சந்திரசேகர் பெம்மசானி வலியுறுத்தினார்.

தோஹாவில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின்  உயர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின்கீழ் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் குறைந்த செலவில் எளிதாகக் கொண்டு சேர்க்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். உலகம் முழுவதும் 220 கோடி மக்கள் இன்னும் இணைய வசதி இன்றி உள்ள நிலையில், கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பை விரிவுபடுத்த பாரத்நெட் திட்டத்தின்கீழ் இந்தியா சுமார் 1,500 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.

மேலும், குறைந்த செலவிலான ஏஐ கணக்கீடுகள், இந்திய மொழிகளுக்கான ஏஐ மாதிரிகள், குவாண்டம் ஆராய்ச்சி மற்றும் 100 5ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள் ஆகியவை குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335168&reg=3&lang=1

****

SK/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335255) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu