தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறங்களில் தீவிரமடையும் 4ஜி இணைப்பு திட்டம்: தொலைத்தொடர்புத் துறை சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 6:25PM by PIB Chennai

இந்தியாவின் கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, தொலைதொடர்புத் துறை 4ஜி  இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் 4ஜி வசதியில்லாத கிராமங்களின் எண்ணிக்கை 2022-ல் 45,180 ஆக இருந்த நிலையில், தற்போது 75சதவீதம்  குறைந்து 11,372 ஆகக் குறைந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய தளங்கள் கிராமப் பகுதிகளில் அதிக அளவிலான டேட்டா பயன்பாட்டை உறுதி செய்துள்ளன. மேலும், விடுபட்ட கிராமங்களை இணைக்கக் கூடுதலாக 26,000 புதிய தளங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தொலைதூர கிராமப்புற மக்களுக்கும் டிஜிட்டல் கல்வி, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் விடுபட்டுள்ள டிஜிட்டல் இணைப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்ய பிஎஸ்என்எல் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335141&reg=3&lang=1

****

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335253) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Gujarati