நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆய்வகம் மீது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 3:51PM by PIB Chennai

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மாநிலங்களுக்கிடையேயான போதைப் பொருள் கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆபரேசன் வஜ்ரா என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது உத்தரப் பிரதேச மாநிலம் மௌ-வில் உள்ள தார்ஜோப்பூர் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆய்வகத்தைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்ட னர்.

உளவுத் துறையின் தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அம்மாநில அதிகாரிகளுடன் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக இயங்கி வந்த செயற்கை போதைப் பொருள் உற்பத்தி ஆலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின் போது பல்வேறு நிலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 11.7 கிலோ மெஃபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334998&reg=3&lang=1    

***

SK/SV/GS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335227) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Assamese , Gujarati