இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 6:30PM by PIB Chennai
மருத்துவச் சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இத்துறையில் செயல்படுத்தப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் 2035–36 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளம் 10 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்.
2020–21-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் எக்ஸ்ரே கருவிகள், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேனர்கள், இதய, எலும்பு உள்வைப்புகள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட உயர்தர மருத்துவச் சாதனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் உற்பத்தி மதிப்பு ரூ.16,000 கோடியைத் தாண்டியுள்ளது.
புதிய விதிகளின்படி, உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். முக்கிய சாதனங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஊக்கத்தொகை பெறுவதற்கான குறைந்தபட்ச விற்பனை இலக்கு நீக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்ப நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் எத்தனை விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கலாம்.
இதன் மூலம் முதலீடு, வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அதிகரிப்பதுடன், மருத்துவச் சாதனங்களின் விலை குறையும். இதன் மூலம் இத்துறையில் இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை மேம்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334770®=3&lang=1
(Release ID : 2334770)
****
SK/PLM/SH