விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 5:53PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. செப்டம்பர் 16 முதல் 30 வரை நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கட்டத்திலும், அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற அமலாக்கக் கட்டத்திலும் அத்துறை தூய்மைப்பணி, அரசு அலுவலகங்களில் நிலுவைப் பணிகளை குறைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டது.

இந்த இயக்கத்தின் கீழ் துறை அலுவலகங்களில் 1,179 இடங்களில் துய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 177 பரிந்துரைகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் இருந்த 63,952 குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. 338 மேல்முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. 43,411 நேரடிக் கோப்புகள் ஆய்வுசெய்யப்பட்டு அதில் 26,379 கோப்புகள் நீக்கப்பட்டன். கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.32,19,644 வருவாய் ஈட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334407&reg=3&lang=1

***

SK/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334842) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Assamese , Gujarati