சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 8:51PM by PIB Chennai
தலைநகர் தில்லியில் மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தி வரும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2026 இந்தியாவின் வளமான, பாரம்பரிய கைவினைத் திறன், கலாச்சார மரபு, தொழில் முனைவோர் உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய துடிப்புமிக்க தளமாக உருவெடுத்துள்ளது.
2026 நவம்பர் 15 வரை நடைபெறும் இக்கண்காட்சி, பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், பயனாளிகள் தங்களுடைய தயாரிப்புகளை பெருமளவில் மக்களிடம் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இந்தக் கண்காட்சியின் மூலம் பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் தங்களுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் கிடைத்த வாய்ப்புகளால் பயனடைந்தனர். இக்கண்காட்சியில் நவம்பர் 1 முதல் நவம்பர் 8 வரை ரூ.55.46 லட்சம் அளவிற்கு கைவினைப்பொருட்கள் விற்பனையாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334470®=3&lang=1
***
SK/IR/PS/SH