இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 4:29PM by PIB Chennai
நாட்டில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்திற்கு மே 13, 2026 அன்று அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, என்டிபிசி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இரண்டு விண்ணப்பங்களுடன் 2-வது சுற்று நிறைவுபெற்றுள்ளதாக நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது. யூரியா, மெத்தனால், டைமெத்தில் ஈதர் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டின் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி முக்கியத் தொழில்துறை தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்பதில் நிலக்கரி எரிவாயுவாக்கலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
முதல் இரண்டு சுற்றுகளின் வெற்றியைத் தொடர்ந்து, நிலக்கரி எரிவாயுவாக்கல் திட்டங்களைச் செயல்படுத்த தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்க ஏதுவாக 3-வது சுற்று இன்று (2026 நவம்பர் 10) தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜனவரி 11, 2027 கடைசி நாளாகும். 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயுவாக்கல் திறனை எட்டுவது என்ற தேசிய இலக்கை அடைய இந்தத் திட்டங்கள் பெரிதும் உதவும். இதன் மூலம் நிலக்கரித் துறையில் தொழில்துறையினரின் பங்களிப்பு அதிகரிப்பதுடன், முதலீடுகளும் ஈர்க்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334671®=3&lang=1
****
SK/PD/SH