இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 3:12PM by PIB Chennai
தில்லியில் இருந்து போபாலுக்கு கடத்தி வரப்பட்ட 6.642 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில், போபாலுக்கு பேருந்தில் பயணம் செய்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை 2026 நவம்பர் 5 அன்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். பயணியின் உடைமைகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த படிக வெண்மை நிறப் பொருளைக் கைப்பற்றினர்.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட களச் சோதனையில், கைப்பற்றப்பட்ட பொருள் ஆம்ஃபெடமைன் எனும் போதைப்பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்ட பயணி கைது செய்யப்பட்டார். பெங்களூரு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட மற்றொரு போதைப்பொருள் வழக்கில் அவர் ஏற்கனவே பிணையில் வெளியே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334614®=3&lang=1
****
SK/PD/SH