ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட தூய்மைப் பணி

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 3:07PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6 மூலம், பணியிடங்களில் தூய்மைப் பணி, அலுவலக மேலாண்மை, குறைதீர்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், பொதுமக்களின் 368 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் பரிந்துரைத்த 4 மனுக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த 7 மனுக்களுக்கும் தீர்வுகாணப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணியிடங்களில் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 285 தூய்மைப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலக மேலாண்மை மூலம் 1,610 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் தேவையற்ற கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. 8,741 சதுர அடி இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆயுஷ் அமைச்சகம், பயனற்ற பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1.94 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சிறப்பு தூய்மை இயக்கம் மூலம் நிலுவையில் உள்ள குறைகள், மேல்முறையீடு, ஆவணங்களை கையாளுதல், தூய்மைப்பணி ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புகள் மூலம் சுகாதாரத்தை மையமாக கொண்ட பணிச்சூழலை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334612&reg=3&lang=1

 

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2334777) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi