சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை நிதிசார் கடமைகளை வளர்ச்சியடைந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 1:11PM by PIB Chennai

துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின்(யுஎன்எஃப்சிசிசி) சிஒபி 31-வது மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியா, பருவநிலை தொடர்பான பன்முகத்தன்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இம்மாநாட்டில் நியாயமான, சமத்துவமிக்க, தொலைநோக்கு பார்வை அடிப்படையிலான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்று தொடக்க உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை செயலாளர் திரு நரேந்திர பூஷன் இம்மாநாட்டை நடத்தும் துருக்கி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். பருவநிலை தொடர்பான பன்முகத்தன்மையை வலுப்படுத்த அனைத்து தரப்பினரும், பேச்சுவார்த்தை குழுக்களும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தாம் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். அத்துடன், ஜி77, சீனா, ஒரே கருத்துடைய வளரும் நாடுகளின் குழு, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் குழுக்களின் கருத்துகளை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்தியா, யுஎன்எஃப்சிசிசி, அதனுடைய பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்து நாடுகளுக்குமான தளங்களாக தொடர்ந்து திகழ்வதாக குறிப்பிட்டது.

பாரிஸ் ஒப்பந்தம் கீழ் உள்ள பருவநிலை நிதிசார் கடமைகளை வளர்ச்சியடைந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டுமென்று இந்தியா குறிப்பிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334571&reg=3&lang=1

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334747) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada