இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 1:52PM by PIB Chennai
மத்திய விளையாட்டுத்துறை சார்பில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு தூய்மை இயக்கம் 6 மூலம், தூய்மை, மின்னணு கழிவு மேலாண்மை, குறைதீர்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. அலுவலக மேலாண்மையின் கீழ், 290 கோப்புகள், 340 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
65 இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், 50,605 சதுர அடி பரப்பளவு மீட்கப்பட்டது. பயனற்ற பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் 9.29 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர சுத்தம் சுகாதாரம் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளையாட்டுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்களது பணியிடங்கள், வீடுகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334595®=3&lang=1
***
SS/LN/GS