பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தகுதிபெற்றுள்ள அனுஜ் ஸ்ரீவத்ரிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 1:46PM by PIB Chennai

செஸ் கிராண்ட்மாஸ்டர் என்று அனுஜ் ஸ்ரீவத்ரி பட்டம் பெற்றதையடுத்து இந்தியா 100 கிராண்ட்மாஸ்டர்களை கொண்ட நாடாக திகழும் வரலாற்றுச் சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இச்சாதனை மிகவும் அசாதாரணமானது என்று குறிப்பிட்ட பிரதமர் இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான அனுஜ் ஸ்ரீவத்ரிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் 100 கிராண்ட்மாஸ்டர்கள் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்றும், இது நமது விளையாட்டு வீரர்களின் சிறந்த திறன், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றையும், இளைஞர்களிடையே செஸ் விளையாட்டு பிரபலமடைந்து வருவதையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளம் செஸ் திறமையாளர்கள் உருவாகி உலக அரங்கில் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய பிரதமர் இச்சாதனை மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாட்டில் பங்கேற்கவும், சிறப்பாக விளங்கவும் ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

‘‘ இந்தியா செஸ் விளையாட்டில் ஒரு சதம் அடித்துள்ளது!

இது அசாதாரணமானது இல்லையா?

இந்தியாவில் தற்போது 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்!

இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தகுதி பெற்றுள்ள அனுஜ் ஸ்ரீவத்ரிக்கு வாழ்த்துகள்! இது ஒரு அற்புதமான சாதனை.

இந்தியாவில் 100 கிராண்ட்மாஸ்டர்கள் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இது நமது விளையாட்டு வீரர்களின் சிறந்த திறன், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றையும், இளைஞர்களிடையே செஸ் விளையாட்டு பிரபலமடைந்து வருவதையும் பிரதிபலிக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளம் செஸ் திறமையாளர்கள் உருவாகி  உலக அரங்கில்  இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இச்சாதனை மேலும் பல இளையோர்கள் செஸ் விளையாட்டில் பங்கேற்க உத்வேகம் அளிக்கட்டும்”

***

(Release ID: 2334594)

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334702) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada