இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மை பாரத்-என்எஸ்எஸ் சார்பாக தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 6:23PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான 100 வார கால போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் கீழ் மை பாரத்-நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) மூலம் நாடு தழுவிய அளவில் 153 நிறுவனங்களில் தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்  ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 1,07,494 பேர் பங்கேற்றனர்.  சமூகக் கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டு உறுதிமொழிகள், தன்னார்வ சேவை ஆகியவற்றின் மூலம் போதைப்பழக்கமற்ற தீபாவளியை ஊக்குவிப்பதற்காக இளைஞர்கள், குடும்பங்கள், சமூக உறுப்பினர்களை இந்த நிகழ்வுகள் ஒன்றிணைத்தன.

போதைப்பொருள் இல்லாத தீப ஒளித் திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள், சமூகப் பெரியோர், குழந்தைகள் மண் அகல் விளக்குகளை ஏற்றினர். இது போதைப்பொருள் எனும் இருளின் மீது ஒளியின் வெற்றியை அடையாளப்படுத்தியது. தீப ஒளித் திருவிழா மற்றும் தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் மொத்தம் 41,600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் பணியில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்க, இந்த பண்டிகைக்கால சூழல் பயன்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334417&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334475) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi