இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 9:14PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஸ்லோவாக்கிய பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோர், ஸ்லோவாக்கியாவின் ரயில்வே, பாதுகாப்பு, வாகன உற்பத்தி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையே அதிகரித்து வரும் வணிக உறவுகளைப் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியாவில் தொழில்களை எளிதாக்குவதற்கும், வெளிப்படையான மற்றும் நிலையான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய ஸ்லோவாக்கிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
‘வளர்ச்சியடைந்த இந்தியா’ நோக்கிய சீர்திருத்தங்களை வரவேற்ற தொழில்துறை தலைவர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், தொழில்நுட்பக் கூட்டணிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலமும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தனர். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவது புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முக்கிய தொழில் துறை தலைவர்கள்:
திரு அலெக்ஸி பால்ஜாவேவ் (தலைவர், டட்ராவாகன்கா)
திரு பீட்டர் மாலெக் (துணைத் தலைவர், டட்ராவாகன்கா)
திரு ராபர்ட் ஸ்பிசாக் (தலைவர், ஏஇசட்இசி குழுமம்)
திரு ரிச்சர்ட் மார்கோ (தலைமை நிர்வாக அதிகாரி, ஈசெட்)
திரு பர்விந்தர் வாலியா (ஆசிய-பசிபிக் பிராந்திய தலைவர், ஈசெட்)
திரு ஜரோஸ்லாவ் குராசினா (தலைமை நிர்வாக அதிகாரி, கிராண்ட் பவர்)
திரு பீட்டர் லெட்னிக்கி (தலைமை நிர்வாக அதிகாரி, பென்டா ஹாஸ்பிட்டல்ஸ் இன்டர்நேஷனல்)
திரு ஸ்டீபன் ரோசினா (தலைமை நிர்வாக அதிகாரி, மாடோர்)
திரு ராஜேஷ் சபனே (மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மாடோர் டெக்னாலஜிஸ் இந்தியா)
திரு மேட்ஜ் கோரெக் (பொது இயக்குநர், வூஜே)
திரு பீட்டர் டுச்சோவிக் (தலைமை நிர்வாக அதிகாரி, விஐபிஓ)
திரு ஆண்ட்ரே பென்செல் (டிஜிட்டல் திறன் தலைவர், விஐபிஓ)
திரு ஜோசெஃப் ஓமெல்கா (மேலாண்மை இயக்குநர், மைக்ரோஸ்டெப்-எம்ஐஎஸ்)
திரு ரிச்சர்ட் வர்கா (தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, விஆர்எம்)
திரு எட்வர்ட் கிறிஸ்டியா (சந்தைப்படுத்தல் மேலாளர், விஆர்எம்)
திரு மிலோஸ்லாவ் கியூரில்லா (இயக்குநர் குழு உறுப்பினர், ஈக்கோ இன்வெஸ்ட்மென்ட்ஸ்)
திரு டிபோர் கிரிகோர் (நிர்வாக இயக்குநர், கிளப் 500)
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273269®=3&lang=1
-----
TV/VK/SU