இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2026 8:21PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் (ராணுவ பள்ளி), அகில இந்திய அளவில் சைனிக் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா 2026 நவம்பர் 7 அன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற சைனிக் பள்ளிகளுக்குப் பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கினார்.
போட்டிகளில், இளையோர் பிரிவு ஆண்கள் கூடைப்பந்தில் கோரகல் சைனிக் பள்ளியும், பெண்கள் கூடைப்பந்தில் விகாசா சைனிக் பள்ளியும் வெற்றி பெற்றன. ஆண்கள் கைப்பந்தில் அமராவதிநகர் சைனிக் பள்ளி முதலிடம் பிடித்தது. பேச்சுப் போட்டியில் ஜான்சி சைனிக் பள்ளியும், விநாடி வினாப் போட்டியில் கபூர்தலா சைனிக் பள்ளியும் வெற்றி பெற்றன.
2026 நவம்பர் 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டி, பல்வேறு மாநில மாணவர்களிடையே தேசிய ஒற்றுமை, கலாசாரப் பரிமாற்றம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கும் தளமாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334033®=3&lang=1
***
SS/PLM/RJ