இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 4:07PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் சிறப்பு தூய்மை இயக்கம்-6 மூலம் தூய்மைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை மத்திய கலாச்சார அமைச்சகம், பணியிடங்களை சுத்தம் செய்தல், பழைய கழிவுபொருட்களை அப்புறப்படுதுதல், ஆவணங்கள் மேலாண்மை ஆகிய பணிகளை மேற்கொண்டது. பொதுமக்களின் புகார்கள், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பணிகளும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் 2,921 தேவையற்ற கோப்புகள் களையப்பட்டதாகவும், 595 இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் 26.60 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331560®=48&lang=1
***
SS/LN/RJ