இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2026 10:22AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சத்தீஸ்கரின் பஸ்தாருக்குச் சென்று, அங்குள்ள பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளார். மேலும், அவர்களின் தியாகங்கள், தன்னலமற்ற சேவை, தேசத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு அவர் மரியாதை செலுத்தவுள்ளார்.
ஒரு காலத்தில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த பஸ்தார் பகுதி, தற்போது வளர்ச்சியின் பாதையில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“நமது பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, பஸ்தாருக்குச் செல்கிறேன்.
ஒரு காலத்தில் நக்சலிசம் ஆதிக்கம் செலுத்திய இந்தப் பகுதியில், இன்று வளர்ச்சி செழித்து வருகிறது.
நமது வீரமிக்க பாதுகாப்புப் படையினரின் தியாகங்கள், தன்னலமற்ற சேவை, தேசத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் போற்றும் வகையில், அவர்களுக்கு எனது வணக்கத்தைச் செலுத்தவிருக்கிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334073®=48&lang=2
****
AD/RB/RJ