பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங்கிற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 11:47PM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 ஜூடோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஹர்ஷ் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்திய ஜூடோ விளையாட்டிற்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்று விவரித்துள்ள பிரதமர், ஹர்ஷ் சிங்கின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அவருடைய சிறப்பான செயல்திறனில் தெளிவாகப் பிரதிபலித்ததாக கூறினார்.

அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;

“இந்திய ஜூடோவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்!”

தங்கப்பதக்கம் வென்ற ஹர்ஷ் சிங்கிற்கு வாழ்த்துகள். அவருடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் அவரது சிறப்பான செயல்திறனில் தெளிவாகப் பிரதிபலித்தது. அவருடைய  எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

***

(Release ID: 2292823)

SS/IR/SU/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333859) வருகையாளர் எண்ணிக்கை : 17