சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் இணையதள வினாடி வினாவில் இதுவரை 16,517 பேர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 7:55PM by PIB Chennai

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் வினாடி வினா போட்டிக்கு ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2026 நவம்பர் 5, நிலவரப்படி, இதில் 16,517 மக்கள் பங்கேற்றுள்ளனர். போதைப்பொருள் இல்லாத இந்தியாவைக் உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு, பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருவதை இந்தப் பங்கேற்பு பிரதிபலிக்கிறது.

மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், இந்த வினாடி வினா 2026 அக்டோபர் 26 அன்று தொடங்கப்பட்டது. போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் தீவிரமாகப் பங்களிக்க ஊக்குவிப்பதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்த வினாடி வினா 2026 அக்டோபர் 26 முதல் நவம்பர் 25 வரை நடத்தப்படுகிறது, மேலும் இதில் அனைவரும் பங்கேற்கலாம்.

பங்கேற்புக்கான இணையதள இணைப்பு: https://mybharat.gov.in/quizzes/yuva/detail/Url9dlIwCinQVSf8lwPB9w/

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333283&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333818) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Gujarati , Telugu , Urdu , हिन्दी