தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தூய்மை இயக்கத்தில் இலக்குகளை விஞ்சியது அஞ்சல் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 7:49PM by PIB Chennai

தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை, தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல், மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைக்கும் வகையில், 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை தனது விரிவான நாடு தழுவிய கட்டமைப்புகளில் சிறப்பு இயக்கம் 6-ஐ வெற்றிகரமாக நடத்தியது.

 இந்த இயக்கத்தின் போது, துறை 1,50,000 பொது மக்கள் குறைகளைத் தீர்த்து வைத்து, 1,500 மேல்முறையீடுகளை முடித்து வைத்தது. 1.35 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் இலக்கைத் தாண்டி, இத்துறை நாடு முழுவதும் 1,50,000 இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டது.  இந்த இயக்கத்தின் விளைவாக, 2,03,570 சதுர அடி அலுவலக இடம் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டது.

இயக்க காலத்திற்குப் பிறகும் இந்த நடைமுறைகளைத் தொடர்வதற்கும், தூய்மையையும் செயல்திறனையும் தனது அன்றாடச் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக நிலைநிறுத்துவதற்கும் இத்துறை உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333279&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333814) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati