இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:33PM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை அதிநவீன டிஜிட்டல் கருவிகள் மூலம் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், 'கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர்' நிறுவனத்துடன் மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் அகர்வால், கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் நிறுவனத்தின் துணைத் தலைவரும் அதன் நிறுவனருமான திரு அமித் சூட் முன்னிலையில், காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், அணுகல்தன்மையை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல் முன்முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சகம் மேற்கொண்டுள்ள பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம், இந்தியாவின் பாரம்பரியத்தை இந்திய மொழிகளில், எந்தவொரு சாதனத்தின் மூலமும் கண்டறிய முடியும். இது, அமைச்சகத்தின் முழுமையானன அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் கூட்டாண்மை குறித்துக் கருத்து தெரிவித்த திரு விவேக் அகர்வால், கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் உடனான கூட்டாண்மை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பண்டைய கையெழுத்துப் பிரதிகள், நினைவுச்சின்னங்கள் முதல், தேசிய அருங்காட்சியகங்களில் உள்ள சேகரிப்புகள் வரையிலான மரபைப் பதிவு செய்யவும், பாதுகாக்கவும், பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333271®=3&lang=1
***
SK/BR/RJ