குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
திறன் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திறனை வலுப்படுத்த எம்எஸ்எம்இ அமைச்சகம், சாம்சங் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 8:31PM by PIB Chennai
இளைஞர்களுக்கான தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் மேம்பாட்டு ஆணையருமான டாக்டர் ரஜ்னீஷ் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆரம்பத்தில் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். சென்னையில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம் (மத்திய கருவி வடிவமைப்பு நிறுவனம்) உட்பட நாடு முழுவதும் உள்ள 15 எம்எஸ்எம்இ நிறுவனங்களின் தொழில்நுட்ப மையங்களில் இது செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333308®=3&lang=1
***
SK/BR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2333781)
வருகையாளர் எண்ணிக்கை : 13