மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் மீன் உற்பத்தி 197.75 லட்சம் டன்னாக உயர்வு: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 8:26AM by PIB Chennai

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 13-வது நிர்வாகக் குழுக் கூட்டம் ஐதராபாத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நேற்று (2026 நவம்பர் 5) நடைபெற்றது. தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்கள், மாநில அரசுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், மீனவர்களின் வருமானம், வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டின் மீன் உற்பத்தி 2019-20-ல் 141.64 லட்சம் டன்னிலிருந்து, தற்போது 197.75 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மீன்வளக் கட்டமைப்பை மேம்படுத்துதல், மீன் சந்தைகள் அமைத்தல், ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து மாநில அமைச்சர்கள் இக்கூட்டத்தில் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333401&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333659) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu