இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 3:25PM by PIB Chennai
விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பங்களில் இந்தியா உலகளவில் முன்னோடியாக உருவெடுத்து வருவதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட காஸ்மோசர்வ் ஸ்பேஸ் நிறுவனத்தின் முதல் கட்ட மையத்தை 2026 நவம்பர் 5 அன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்து உரையாற்றிய அவர், 2030-க்குள் விண்வெளிக் கழிவுகளற்ற சூழலை உருவாக்குவதே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்று தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் நாட்டின் விண்வெளிப் பொருளாதார மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதுடன், அடுத்த பத்தாண்டுகளில் இது 40 முதல் 45 பில்லியன் டாலராக உயரும் என்று அவர் குறிப்பிட்டார். ஒற்றை இலக்கத்தில் இருந்த விண்வெளித்துறை புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 450 ஆக விரிவடைந்துள்ளது.
சுமார் 14,800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இந்த முதற்கட்ட மையம், விண்வெளி ரோபோக்களை வடிவமைத்து ஆய்வு செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளது. மனிதகுலத்தின் பாதுகாப்பான விண்வெளிப் பயன்பாட்டை உறுதி செய்வதில் இந்தியாவின் பங்களிப்பை இந்த மையம் வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333047®=3&lang=1
***
SK/PD/SU