பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2026 7:32PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை என்றும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது தங்கப் பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது என்றும், இது வீரர்களின் ஒரு அசாத்தியமான செயல்பாடு என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முதல் முறையாக, இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டும் ஒரு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆசியாவில் இந்திய ஹாக்கி உயர்ந்து நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"2026 ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய ஹாக்கிக்கு உண்மையிலேயே மிகவும் சிறப்பானதாக அமைந்தது!

இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட நமது ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.  தொடர்ச்சியாக இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாகத் தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது தங்கப் பதக்கமும் இந்திய அணி வென்றுள்ளது. இது நமது வீரர்களின் மிகச் சிறப்பான பயணமாக அமைந்துள்ளது.

முதல் முறையாக, நமது ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டும் ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்ததாகிறது. ஆசிய அரங்கில் இந்திய ஹாக்கி உயர்ந்து நிற்கிறது என்பது தெளிவாகிறது: பிரதமர் நரேந்திரமோடி”

***

(Release ID: 2318743) 

AD/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2333234) வருகையாளர் எண்ணிக்கை : 17