சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 1:12PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற பணிகளில் நூறு சதவீத இலக்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எட்டியது. அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணியை கடைபிடித்தல், நிலுவைப் பணிகளை குறைத்தல், நிர்வாகத் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.
நாடு முழுவதுமுள்ள சுகாதாரத்துறை தலைமையகங்கள், மத்திய அரசு மருத்துவமனைகள், அதுசார்ந்த, தொடர்புடைய அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த இயக்கம் அமல்படுத்தப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் நடைபெற்ற தூய்மைப்பணி, கழிவு மேலாண்மை, நோயாளிகளுக்கான வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
இப்பணியின் போது 1,62,325 இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 12,840 பொதுமக்களின் குறைகளுக்கும், 6,026 மேல்முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 119 குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332932®=3&lang=1
***
AD/IR/PS/SH