மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இகேஏ-1, தீர் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 10:02PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் வாயிலாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இகேஏ-1, தீர் 2B & தீர் 5B ஆகிய புதிய அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் 2026 நவம்பர் 3 அன்று வெளியிடப்பட்டன. புதுதில்லியில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலர் திரு எஸ். கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உயர் அலுவலர்களும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சோக்கெட் லேப்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இகேஏ-1 மாதிரி, கணிதம், கணினி நிரலாக்கம், பகுப்பாய்வுத் திறன்களுடன் ஆங்கிலத்துடன், அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜென்டீக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தீர் மாதிரிகள், இணைய இணைப்பு இல்லாத சூழலிலும் நேரடியாக கணினிகளிலேயே பாதுகாப்பாகச் செயல்பட்டு தகவல் மேலாண்மைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, நிர்வாகம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் தகவல்களின் தனியுரிமையைப் பாதுகாத்து, உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதில் இந்த மாதிரிகள் முக்கிய மைல்கல்லாக விளங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332315&reg=3&lang=1

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333119) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Nepali