உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சல் வன்முறையற்ற சத்தீஸ்கர்: மாநில தின நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 8:35PM by PIB Chennai

ராய்ப்பூரில் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநில தின நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2000-ம் ஆண்டில் தனி மாநிலமாக சத்தீஸ்கரை உருவாக்கிய முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர், தற்போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் மாநிலம் நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

நக்சல் வன்முறையற்ற மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளதற்குப் பாராட்டு தெரிவித்த அவர், இப்பெரும் சாதனைக்காக மத்திய ஆயுதக் காவல் படையினருக்கும், மாநில காவல்துறைக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட்டு, சரணடைந்த நக்சலைட்டுகளை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பஸ்தார் தசரா, பழங்குடியின பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மூலம் பிராந்தியத்தின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

பிரதமர் அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சத்தீஸ்கர் அரசு குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது. மஹதாரி வந்தன் திட்டம், நெல் கொள்முதல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டு எழுத்தறிவு விகிதம் 65 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்ந்துள்ளது. நக்சல் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள சத்தீஸ்கர், இயற்கை எழில் கொஞ்சும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூலம் நாட்டின் முன்னணி சுற்றுலா மாநிலங்களில் ஒன்றாக விரைவில் உயரும் என்றும் திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332277&reg=3&lang=1

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333113) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia