இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 8:04PM by PIB Chennai
இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தில் கடலோர, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பங்கை 2047-க்குள் 6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் நடைபெற்ற மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஒடிசா அரசுடன் இணைந்து பாராதீப் துறைமுக ஆணையம் மூலம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் புரி சர்வதேச சொகுசுக் கப்பல் முனையம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் கடல்சார் துறை மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியத் துறைமுகங்களில் கையாளப்படும் கடலோர சரக்குப் போக்குவரத்து 74 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 177 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து சுமார் 140 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடலோர சரக்கு போக்குவரத்து ஊக்குவிப்புத் திட்டம், இந்திய சொகுசுக் கப்பல் இயக்கம் ஆகிய இரண்டு முக்கிய முன்னெடுப்புகளின் மூலம் 5.6 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 16 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2029 மார்ச் மாதத்திற்குள் சொகுசுக் கப்பல் பயணிகளின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான கட்டமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332260®=3&lang=1
***
AD/PD/RJ