இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 2:41PM by PIB Chennai
மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், 2020-ம் ஆண்டின் தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளைத் திறம்பட அமல்படுத்துவது, ஒருங்கிணைப்பு குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விவாதிப்பதற்காக, தலைமைத் தொழிலாளர் ஆணையர் திருமதி சோனல் மிஸ்ரா, இ.ஆ.ப., தலைமையில், புதுதில்லி, துவாரகாவில் உள்ள ஸ்ரமேவ் ஜெயதே (உழைப்பே வெற்றி) மாளிகையில், 3 நவம்பர் 2026 அன்று ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திறம்பட அமல்படுத்துவதற்கு ஏதுவான நடைமுறைகளை ஊக்குவிக்கவும், நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்த விளக்கமும், ரயில்வே துறைக்குத் தொடர்புடைய முக்கிய விதிமுறைகள், தொழிலாளர் சட்ட இணக்க நடைமுறைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்கள், பதிவு, உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள், டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு ஆகியவை குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332458®=3&lang=1&_gl=1
***
AD/SV/RJ