சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 8:57PM by PIB Chennai
நாட்டில் மருந்துகளின் தரம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருந்து விதிகள், 1945-ல் திருத்தங்களைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட முக்கியமான தர அளவுகோல்களின் அடிப்படையில் 'தரமற்றவை' என்று அறிவிக்கப்படும் மருந்துகளின் உற்பத்தி உரிமைகளை உடனடியாக இடைநிறுத்தம் செய்ய வழிவகை செய்யப்படும்.
தரநிலைக்குக் குறைவான மருந்துகள் கண்டறியப்படும்போது உடனடியாக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அத்தகைய மருந்துகளின் உற்பத்தி, விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறையை வலுப்படுத்தவும் இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வழிவகுக்கும். இவை நோயாளிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332796®=3&lang=1
***
SK/RB/RJ