வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களுக்குச் சேவை செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 5:47PM by PIB Chennai

மக்களுக்குச் சேவை செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மாளிகை கட்டிடங்களை  இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துப் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

இதன் மூலம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மக்களை மையமாகக் கொண்ட நிர்வாக நடைமுறைகளுக்கான  உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய அலுவலகங்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்த முதல் நகரம் மற்றும் முதல் மாநிலத் தலைநகரம் என்ற பெருமையை ஜெய்ப்பூர் பெற்றுள்ளது.

இந்த முன்னெடுப்பிற்காக வர்த்தகத் துறை மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு வர பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும், குறிப்பாக ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்று திரு பியூஷ் கோயல், கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332658&reg=3&lang=1&_gl=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332950) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati