இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உங்கள் வாக்கை அறிந்துகொள்ளுங்கள் பிரச்சாரத்தின் கீழ் "மை பாரத்" அமைப்பின் மூலம் ஒரே நாளில் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 8:37PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி: உங்கள் வாக்கை அறிந்துகொள்ளுங்கள் பிரச்சாரத்தின் கீழ், மை பாரத் அமைப்பின் மூலம் ஒரே நாளில் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ‘மேரா யுவா பாரத்’ அமைப்பு வாயிலாக, நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இன்று 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100 இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தியது. தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஜனநாயகச் செயல்பாட்டில் இளைஞர்கள் பொறுப்புடனும், தெளிவான புரிதலுடனும் பங்கேற்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் அமைந்தன. இதில் 16,600-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், 100 இளைஞர் ஆளுமைகளும் பங்கேற்றனர். மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், வாக்குரிமை, குடிமைப் பொறுப்புகள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்கு குறித்து விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகள் வட இந்தியாவில் டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம்; தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி; வடகிழக்கு பிராந்தியத்தில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் மிசோரம், கிழக்கு இந்தியாவில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம், மத்திய இந்தியாவில் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம், மற்றும் மேற்கு இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332787&reg=3&lang=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332948) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Assamese , English , Urdu , Malayalam