மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'காசி தமிழ் சங்கமம் 5.0' நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 8:06PM by PIB Chennai

காசி தமிழ் சங்கமம் 5.0 தொடர்பான முன்னேற்பாடுகள், பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்,  உயர்கல்வித் துறை செயலாளர் திருமதி தீப்தி கௌர் முகர்ஜி தலைமையில் 2026 நவம்பர் 3-ம் தேதி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி, உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அமித் குமார் கோஷ், மத்திய கல்வி அமைச்சகம், மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது, ​​துறைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாக ஒருங்கிணைப்பு, ஐஆர்சிடிசி மூலம் பிரத்யேக ரயில் போக்குவரத்து ஏற்பாடுகள், இதர தளவாட, உள்கட்டமைப்பு வசதிகள், கண்காட்சிகள், சுற்றுலாப் பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்  ஐந்தாவது பதிப்பு, ‘திருக்குறள் பயில்வோம்’ என்ற கருப்பொருளில், 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332761&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332933) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi