புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 8:54PM by PIB Chennai
“பிரதமரின் இலவச சூரிய வீடு திட்டம், உண்மையிலேயே ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இது மக்கள், மாநிலங்கள், ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மையையும் சேமிப்பையும் உறுதி செய்கிறது” என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார். ‘பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026’-ன் மூன்றாம் நாளில், கலந்துரையாடல் அமர்வு ஒன்றில் பங்கேற்று பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
கூரை மீதான சூரியசக்தித் திட்டத்தால், இந்தியா தற்போது ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் சுமார் ஒரு லட்சம் சூரியசக்தி அமைப்புமுறைகளை நிறுவி வருவதாக திரு ஜோஷி குறிப்பிட்டார். இது மாசு உமிழ்வைக் குறைப்பதுடன், தேவை அதிகம் ஏற்படும் நேரங்களில் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான வீடுகள் மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கி வருவதாகவும், உபரி மின்சாரத்தை மீண்டும் மின் கட்டமைப்புக்கு விற்பதன் மூலம் கணிசமான கூட்டு வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2014-ல் வெறும் 3 ஜிகாவாட்டாக இருந்த நிறுவப்பட்ட திறன், இன்று 172 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், சூரியசக்தித் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
'அடுத்த டெராவாட் தூதரக உரையாடல்' நிகழ்வில், தூய்மையான எரிசக்தியின் அடுத்த டெராவாட் அளவை எட்டுவதற்கு நாடுகள், தொழில்நுட்பங்கள், நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அவசியமென வலியுறுத்தப்பட்டதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332794®=3&lang=1
***
SK/RB/RJ