தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாக்பூர் பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்திய நக்ஸல் பாதிப்பில்லாத இந்தியா குறித்த கலந்துரையாடல் நிகழ்வில், பாதுகாப்பு, மேம்பாடு, சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:02PM by PIB Chennai

நாக்பூர் பத்திரிகை தகவல் அலுவலகம், கட்சிரோலி காவல்துறையுடன் இணைந்து, இன்று, கட்சிரோலி காவல் தலைமையகத்தில் நக்ஸல் பாதிப்பில்லாத இந்தியா என்ற கருப்பொருளில் ஊடகப் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பயிலரங்கில், மூத்த காவல் அதிகாரிகள், துறை சார்ந்த நிபுணர்கள், ஊடக வல்லுநர்கள் ஒன்றிணைந்து, அப்பகுதியின் மாறிவரும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சூழல் குறித்தும், இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.

நாக்பூர் மண்டலத்தின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்புக் காவல் ஆய்வாளர்  திரு சந்தீப் பாட்டீல், காணொலி  வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்று, நகர்ப்புற மாவோயிசம் குறித்தும், அதன் விரிவான தாக்கங்கள் குறித்தும்  உரையாற்றினார். தொடர்ச்சியான முயற்சிகள், உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செயல்பாடுகள் மூலம், மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த கட்சிரோலி மாவட்டம், எவ்வாறு நக்சல் அச்சுறுத்தலற்ற மாவட்டமாக மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். 'நக்சல் பாதிப்பில்லாத இந்தியா’  என்ற தேசிய இலக்கை அடைவதற்கான முயற்சியில், கட்சிரோலி மாவட்டம்  முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332724&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332929) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी