கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தவாங் மடாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தரின் புனித நினைவுப்பொருட்களை பக்தர்கள் கண்டுவருகின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 5:28PM by PIB Chennai

காதென் நம்கியால் லாட்சே (தவாங் மடாலயம்) பகுதியில்  சாக்யமுனி புத்தரின் புனித நினைவுப்பொருட்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு தவாங் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் அண்மைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பக்தர்களுக்கு ஒரு முக்கிய ஆன்மீக ரீதியிலான மரியாதைக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிகழ்வின முதல் மூன்று நாட்களில் மடாலயத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். புனித நினைவுப் பொருட்களை காண்பதற்காகவும், பிரார்த்தனைகளில் ஈடுபடவும், மரியாதை செலுத்தவும், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். மக்களின் இந்த ஈடுபாடு புத்தர் மீதும் அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் மீதும்  அவர்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையையும், பக்தியையும் வெளிப்படுத்துகிறது.

இக்கண்காட்சி புத்த துறவிகள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் ஆகியோருக்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களுக்கு புனித நினைவு பொருட்களை வணங்கவும், அவற்றின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணரவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் கருணை, அமைதி, ஞானம், உலகளாவிய சகோதரத்துவம் குறித்த புத்தரின் காலத்தால் அழியாத போதனையுடன் மீண்டும் தங்களை இணைத்துக்கொள்ள மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332122&reg=3&lang=1

                                                                                                           ***

SK/IR/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2332457) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam