இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 10:20AM by PIB Chennai
மத்திய வர்த்தகம், தொழில்துறை, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா 12 இந்திய நிறுவனங்களின் வணிகப் பிரதிநிதிகளுடன் 2026 நவம்பர் 2,3 ஆகிய நாட்களில் போலந்தில் பயணம் மேற்கொண்டார். போலந்து பிரதமர் திரு டோனல்ட் டஸ்க் கடந்த மாதம் இந்தியா வந்திருந்ததைத் தொடர்ந்து இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இப்பயணத்தின் போது ஜிதின் பிரசாதா, போலந்து நாட்டின் துணைப்பிரதமரும் டிஜிட்டல் விவகாரத்துறை அமைச்சருமான திரு கிறிஸ்டோஃப் காவ்கோவ்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், தரவு மையங்கள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதனால் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து போலந்து வெளியுறவு அமைச்சர் திரு இக்னாசி நீம்சிக்கியுடன் திரு பிரசாதா விரிவாக விவாதித்தார். வேளாண் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் சிறந்த ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சிறிய, நடுத்தர தொழில்துறைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் திரு பிரசாதா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332357®=3&lang=1
***
AD/IR/SM/PS