இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 5:50PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சியான டெக்ஸ்மின்-நிதி ஆயோக் இடையே , முக்கியமானம் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு விருப்ப அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பு, உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சி, புத்தாக்கத்தை ஊக்குவித்தல், இந்தியாவில் உறுதியான, நிலையான கனிம மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 'தேசிய முக்கியமான கனிமங்கள் இயக்கம்', 'தற்சார்பு இந்தியா', 'வளர்ச்சியடைந்த இந்தியா' ஆகிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பட அமைந்துள்ளது.
நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் கோவர்தன் தாஸ், ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் வளாகத்தில் வருகை புரிந்த போது, இந்த விருப்ப அறிக்கை கையெழுத்தானது. அங்கு, இந்திய வேதியியலாளர்கள் கவுன்சிலின்45-வது ஆண்டு தேசிய மாநாட்டின் ஒரு பகுதியாக, அரியவகை கனிமங்கள், அரிய மண் தனிமங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் கோவர்தன் தாஸ், தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப தற்சார்பு, வகிளர்ச்சியடைந்த இந்தோயாவிற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, அரியவகைக் கனிமங்கள் ஒரு உத்திசார் காரணியாக விளங்குவதை வலியுறுத்தினார். இந்தியாவின் வளமான உலோகவியல் பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில் துறை ஒத்துழைப்பின் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332152®=3&lang=1
****
SK/SV/RJ