பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து, பராமரிக்க வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 5:44PM by PIB Chennai

பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து, பராமரிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் நவம்பர் 3, 2026 அன்று மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் நடைபெற்ற பாதுகாப்புத் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் ராணுவத் தயார்நிலை என்பது தொழில்நுட்பம்,  தொழில்முறைத் திறன்களுடன் வலுவாகப் பிணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கியதத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் தளவாடங்கள்,  தொழில் நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அவற்றைப் பராமரிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

தற்சார்பு என்பதைத் தொழில்நுட்ப இறையாண்மைக்கான ஒரு முயற்சியாகக் கருத வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஏனெனில், தற்சார்பு என்பது நாட்டின் முக்கியமான பாதுகாப்புத் தேவைகள் வெளிநாட்டுச் சார்புநிலையைச் சார்ந்திருக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும். ஒரு பாதுகாப்புத் தளத்தை வடிவமைப்பதற்கான அறிவு, அதைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், மேம்படுத்துவதற்கான அறிவுசார் சொத்துரிமை, அதன் முழுமையான பயன்பாட்டுச் சுழற்சி, பராமரிக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதே உண்மையான தற்சார்பு நிலை என்று திரு ராஜ்நாத் சிங் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332148&reg=3&lang=1   

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332279) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Malayalam