சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்தகுடிமக்கள், இளையோர் பிணைப்பை வலுப்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 4:54PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 2026 நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை, மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார். மூத்த குடிமக்கள், இளையோர் இடையேயான புரிதல், மூத்தோர்களுக்கு மரியாதை, அவர்களின் அனுபவ பகிர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளது. சமூகத்திற்கு முதியவர்கள் ஆற்றிய பணிகள், முதுமையான காலத்தில் அவர்களின் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில், இந்நிகழ்வு அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், தன்னார்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பரிமாற உள்ளனர்.

முதியவர்களின் வாழ்க்கை அனுபவம், அவர்களின் திறன், பாரம்பரியத்தை பின்பற்றிய வாழ்க்கை முறை ஆகியவை குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்வும், இளைஞர்களிடம் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள், இளைஞர்களின் திறமை ஆகியவற்றை முதியோர் அறிந்துகொள்ளும் வகையிலும், இந்த பிரசாரம் அமைய உள்ளதாகவும் தெரிவித்தனர். இதுதவிர, மூத்த குடிமக்கள் உடல்நலம் சார்ந்து யோகா, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332088&reg=3&lang=1

****

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332272) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada