இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 4:42PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு 1.3 மெட்ரிக் டன் சிந்தூரி வகை மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்ய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் உதவியது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமமா ஏற்றுமதி நிறுவனம் தலா 2 கிலோ கிராம் எடை கொண்ட 650 பெட்டிகளை ஏற்றுமதி செய்தது. இம்முயற்சி, உள்ளூர் விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்பை ஏற்றுமதியாளர்களுடன் இணைப்பதன் மூலம் இமாச்சலப் பிரதேசத்தின் தோட்டக்கலை விளைப்பொருட்கள் சர்வதேச சந்தையை சென்றடைய வழிவகைச் செய்கிறது. இந்த மாதுளம் பழங்கள் உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுமார் 600 விவசாயிகளை கொண்ட புந்தர் வேளாண் உற்பத்தியாளர் அமைப்பினரிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. குல்லு மாவட்ட தோட்டக்கலை நிர்வாகம் இதற்கான கொள்முதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து இம்முயற்சிக்கு உதவியது.
இமாச்சலப் பிரதேசத்தில் பயிரிடப்படும் மாதுளம் பழ ரகங்களில் பக்வா, கந்தாரி ஆகிய ரகங்களுடன் சிந்தூரி ரகமும் ஒன்றாகும். கவரும் வகையிலான சிவப்பு நிறத்தோள், அதிக சாருள்ள விதைகள், இனிப்புடன் கூடிய புளிப்புச் சுவை கொண்ட இந்த சிந்தூரி வகை மாதுளம் பழங்கள் உடனே உண்பதற்கு ஏற்றவையாகும். ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை பெறக்கூடியவையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332080®=3&lang=1
***
AD/IR/PS/RJ