சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீர்வை நோக்கிய பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும்: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 2:54PM by PIB Chennai

ஐக்கிய நாடுகளின் 31-வது பருவநிலை மாற்ற மாநாடு துருக்கியில் உள்ள ஆண்டால்யாவில் 2026 நவம்பர் 9 முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கவுள்ள நிலையில், மாநாட்டில் இந்தியா முன்னெடுத்துச் செல்லும் கருத்துகள் குறித்து எடுத்துரைக்க மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்திர் யாதவ், புதுதில்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திறன் மேம்பாடு, அறிவுப் பகிர்வு, புவியியல் சார்ந்த தீர்வுகளை மையமாக கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா அணுகும் என குறிப்பிட்டார்.  பருவநிலை மாநாட்டின் நோக்கங்களையும், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையவும், உலகளாவிய முயற்சிக்கு இந்தியா நேர்மறையான பங்களிப்பை செய்யும் என்றும் கூறினார். காலநிலை நிதி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், காலநிலை நிதி செயல் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கையை இந்த மாநாட்டில் முன்னெடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தும் என்றும் கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்றத்தில் செலவு, அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம் ஆகியவற்றில் உள்ள தடைகளை களைய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தால் வேளாண்மை, வனம், உணவு, கடலோர பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் சாவல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாநாட்டில் இந்தியா  எடுத்துரைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332018&reg=3&lang=1

***

AD/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332244) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Malayalam