வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டை உயிரி பொருளாதாரத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக திகழச்செய்ய அறிவியல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 11:06AM by PIB Chennai

இந்தியாவின் உயிரி பொருளாதார வாய்ப்பு: புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலை வட்டமேசை கூட்டத்திற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, நித்தி ஆயோக், நித்தி ஃபிரண்டயர் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், உயிரி மருந்து புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு நாட்டின் உயிரி பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

அப்போது பேசிய திரு பியூஷ் கோயல், நாட்டை உயிரி பொருளாதாரத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக திகழச்செய்வதற்கு அறிவியல் திறன்களையும், தொழில் முனைவோர் திறமையையும் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். விரைவான ஒப்புதல்கள், நிதி பெறுவதில் விரைவான அணுகல், பகிரப்பட்ட உள்கட்டமைப்பு, வலுவான தொழில்துறை-கல்வித்துறை-அரசு ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331901&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2331989) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati