சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதிமன்றங்களில் இ-தாக்கல் 3.0 தொடர்பான பயிலரங்கு புதுதில்லியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 8:38AM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறை ‘இ-தாக்கல் 3.0 செயல்முறையிலிருந்து நடைமுறைக்கு’ என்ற தலைப்பில் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிலரங்கு 2026 நவம்பர் 4 அன்று பிற்பகல் 2 மணி முதல் புதுதில்லி மௌலானா ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவனில் 5-வது அரங்கில் நடைபெற உள்ளது. இ-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி, அரசு அதிகாரிகளுக்கு இ-தாக்கல் 3.0 தளத்தை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மூலம் நீதிபெறுவதை எளிதாக்குவதற்காக நீதித்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் இ-குழு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தகவல் மையம் வாயிலாக நடைபெறும் இப்பயிலரங்கில் பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331870&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2331980) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: Nepali , Kannada , English , Urdu , हिन्दी