புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026 துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 8:35PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியின் பாரத மண்டபத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அன்றாட வாழ்விலும் தேசிய வளர்ச்சியிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 

இந்த மாநாடு சர்வதேச சூரிய  சக்தி கூட்டணியின் ஒன்பதாவது பேரவையுடன் இணைந்து நடைபெறுவதுடன், பசுமை ஹைட்ரஜன் குறித்த நான்காவது மாநாட்டின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

 

 

சமீபத்திய உலகளாவிய இடையூறுகள் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பொருளாதார பாதுகாப்பிற்கும் இடையிலான நேரடித் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறிய பிரதமர், புதைபடிவ எரிபொருட்களைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பது உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் மீண்டும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

 

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைச் சுட்டிக்காட்டிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி, இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று கூறினார். சர்வதேச நிதியம், 2026-27-ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை 7 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியுடன் எரிசக்தித் தேவையும் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் தேவைகளை நீடித்த முறையில் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331789&reg=3&lang=1

 

 

***

TV/BR/SH

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2331841) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Khasi , English , Urdu , Kannada