உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சண்டிகர் நிர்வாகத்தின் ரூ. 258 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 7:41PM by PIB Chennai

சண்டிகர் நிர்வாகத்தின் சார்பில் ரூ. 258 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, கடந்த 15 ஆண்டுகளாகத் தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் எதிர்க்கட்சியினர், தற்போது 'போலி நாடாளுமன்றம்' என்ற புதிய வழியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார். பொய்களைப் பரப்புதல், குழப்பத்தையும் எதிர்மறைச் சூழலையும் உருவாக்குதல், நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல், நாடாளுமன்ற விவகாரங்களை வீதிகளுக்குக் கொண்டு சென்று அமளியில் ஈடுபடுதல் போன்ற அணுகுமுறைகளை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

2029 டிசம்பர் 31-க்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்தியப் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்குவதில்  என்பது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், நாட்டைப் பாதுகாப்பானதாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் மாற்றுவது யார், புத்தாக்கத்தை ஊக்குவிப்பது யார், புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது யார், நாட்டைப் பொருளாதார ரீதியாக வளமானதாக மாற்றுவது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331312&reg=3&lang=1

***

TV/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2331432) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia