ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு-மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் விரைவு ரயில் சேவை துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 7:21PM by PIB Chennai

பெங்களூரு - மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு ஹெச். டி. குமாரசாமி, இணையமைச்சர்கள் திரு வி. சோமன்னா, திருமதி ஷோபா கரந்தலாஜே, இதர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பெங்களூரு-மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் சேவையின் அறிமுகம் குறித்துக் குறிப்பிட்ட திரு வைஷ்ணவ், இது, நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவன தலைநகரான பெங்களூருவையும், நிதித் தலைநகரான மும்பையையும் இணைக்கும் என்று தெரிவித்தார். கர்நாடகாவில் அதிவேக ரயில் இணைப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும், பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும் புதிய ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் பயண நேரம் கணிசமாகக் குறையும் என்று குறிப்பிட்ட அவர், பெங்களூரு - சென்னை இடையிலான பயணத்திற்கு 73 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும், பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான பயணத்தை சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்களில் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331297&reg=3&lang=1

***

TV/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2331423) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Kannada