பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு ஹரியானா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 12:37PM by PIB Chennai

ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு ஹரியானா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (01.11.2026) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற வரலாறு, சிறந்த வீரம், வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்ட ஹரியானா, தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அதன் நாட்டுப்புற மரபுகளும், துடிப்பான கிராமப்புற கலாச்சாரமும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை எப்போதுமே வளப்படுத்தி வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மை, விளையாட்டு, பாதுகாப்புப் படைகள், தொழில்துறை, கல்வி, புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஹரியானா மக்கள் தங்களது கடின உழைப்பு மூலமும் அர்ப்பணிப்பின் மூலமும் திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளார். இம்மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் மூவர்ணக் கொடியின் பெருமையை உயர்த்தி வரும் வேளையில், அதன் விவசாயிகள் நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றனர் என்று திரு நரேந்தி்ர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331095&reg=3&lang=1

***

SK/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2331207) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Kannada , Malayalam