குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை, ஒழுக்கம், நாட்டைக் கட்டமைப்பது குறித்த கொள்கைகளிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 6:07PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை, ஒழுக்கம், நாட்டைக் கட்டமைப்பது  குறித்த கொள்கைகளிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்னன் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி, ‘தேசிய ஒற்றுமை தினம்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சர்தார் கதை’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர், சர்தார் படேலின் வாழ்க்கை, இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரின் வரலாறு மட்டுமின்றி, அது இந்தியாவின் ஒற்றுமை, துணிச்சல், நாட்டைக் கட்டமைத்த வரலாறும் அடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் சர்தார் படேல் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

 

பிரிவினையால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழல், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன்  இணைக்க வேண்டிய அவசியம் என பல்வேறு சவால்கள் இருந்தன. தனது உறுதியான மன உறுதி, சமாதானப்படுத்தும் திறன், நிர்வாகத் திறன்,  ராஜதந்திரம் ஆகியவற்றின் மூலம், சர்தார் படேல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை வெற்றிகரமாக முடித்து, ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கினார். அவரது இந்த அசாதாரண பங்களிப்பிற்காக நாடு என்றென்றும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சர்தார் படேல் முன்னிறுத்திய ஒற்றுமை உணர்வு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற  இலக்கை எட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். 1947 முதல் இன்று வரை, இந்தியாவின் பயணம் துணிச்சல், உறுதிப்பாடு, ஒருங்கிணைந்த தீர்மானத்தை வெளிப்படுத்துகிறது என்றும், அதற்கான இலக்கை நோக்கிய பயணம், மேலும் பல பெரிய லட்சியங்கள், விருப்பங்கள், அர்ப்பணிப்புடன் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சர்தார் படேலின் கொள்கைகள் இன்றும் பொருத்தமானவை என்பதை வலியுறுத்திய அவர், உண்மை, எளிமை, துணிச்சல், ஒழுக்கம்,  கடைக்கோடி மனிதனுக்கும் சேவை செய்தல் போன்ற விழுமியங்களை நாடு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, இளைஞர்கள் சர்தார் படேலின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம்  பெற்று, தங்களின் அளப்பரிய ஆற்றல், திறன்களை ஆக்கபூர்வமான வகையில், நாட்டைக் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

சர்தார் படேலின் வாழ்க்கை, அவரது பாரம்பரியத்தை கதை சொல்லும் மரபு எனும் காலத்தால் அழியாத கலை வடிவம் மூலம், அனைத்து மக்களுக்கும்  கொண்டு சேர்த்ததற்காக, டாக்டர் சோபனா ராதாகிருஷ்ணா, அவரது குழுவினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

சர்தார் படேல் வழங்கிய ஒருங்கிணைந்த இந்தியாவை ஒருமைப்பாட்டுடனும், வலிமையானதாகவும், நீதி பரிபாலனத்துடனும்  வைத்திருப்பது நம் அனைவரின்  கடமையாகும் என்றும், ஒரே பாரதம்;  அது என்றென்றும் ஒன்றிணைந்து இருக்கும் என்று கூறி திரு சி பி ராதாகிருஷ்ணன் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சாந்து உட்பட பிற முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, புது தில்லியில் உள்ள சர்தார் படேல் சௌக், குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், சர்தார் வல்லபாய் படேலின் திருவுருவச் சிலைக்கு திரு சி பி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற கதைசொல்லியான டாக்டர் சோபனா ராதாகிருஷ்ணா, சர்தார் படேலின் வாழ்க்கை வரலாறு, அவரது கொள்கைகள், நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பணிகள் குறித்து உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330939®=3&lang=1

(Release ID: 2330939)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330971) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati , Malayalam